பாடல் 488
சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
- தலம்
- சிதம்பரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனந்தத்த தனதான தனந்தத்த தனதானதனந்தத்த தனதானதனதான
பாடல் வரிகள்
சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவதுரந்துற்ற குளிர்வாடையதனாலுந்
துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியாலதொடர்ந்துற்று வருமாதர்வசையாலும்
அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலுமடைந்திட்ட விடைமேவுமணியாலும்
அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணிஅசைந்துற்ற மதுமாலைதரவேணும்
கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவிகரந்துற்ற மடமானினுடனேசார்
கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில்களம்பற்றி நடமாடுமரன்வாழ்வே
இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீரஇதம்பெற்ற மயிலேறிவருகொவே
இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொடெறிந்திட்டு விளையாடுபெருமாளே.
