பாடல் 486
நீல மாமுகில் போலும் வார்குழ
- தலம்
- சிதம்பரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தானன தான தானனதான தானன தான தானனதான தானன தான தானனதனதான
பாடல் வரிகள்
நீல மாமுகில் போலும் வார்குழலார்கள் மாலைகு லாவ வேல்கணைநீள வாள்விழி பார்வை காதிருகுழையாட
நீடு மார்பணி யாட வோடியகோடு போலிணை யாட நூலிடைநேச பாளித சோலை மாமயிலெனவேகிக்
காலி னுபுர வோசை கோவெனஆடி மால்கொடு நாணி யேவியர்காய மோடணு பாகு பால்மொழிவிலைமாதர்
காத லாயவ ரோடு பாழ்வினைமூழ்கி யேழ்நர காழு மூடனைகாரிர் பாருமை யாசி வாபதமருள்வாயே
கோல மாமயி லேறி வார்குழையாட வேல்கொடு வீர வார் கழல்கோடி கோடிடி யோசை போல்மிகமெருதூளாய்க்
கோடு கோவென ஆழி பாடுகள்தீவு தாடசு ரார்கு ழாமொடுகூள மாகவி ணோர்கள் வாழ்வுறவிடும்வேலா
நாலு வேதமு டாடு வேதனையீண கேசவ னார்ச கோதரிநாதர் பாகம்வி டாள்சி காமணிஉமைபாலா
ஞான பூமிய தான பேர்புலியூரில் வாழ்தெய்வ யானை மானொடுநாலு கோபுர வாசல் மேவியபெருமாளே.
