பாடல் 459
சிரித்துச் சங்கொளி யாமின லாமென
- தலம்
- சிதம்பரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தத் தந்தன தானன தானனதனத்தத் தந்தன தானன தானனதனத்தத் தந்தன தானன தானனதனதான
பாடல் வரிகள்
சிரித்துச் சங்கொளி யாமின லாமெனவுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழுசெணத்திற் சம்பள மேபறி காரிகள்சிலபேரைச்
சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல்புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடைதிருத்திப் பண்குழ லேய்முகி லோவியமயில்போலே
அருக்கிப் பண்புற வேகலை யால்முலைமறைத்துச் செந்துவர் வாயமு தூறல்களளித்துப் பொன்குயி லாமென வேகுரல்மிடறோதை
அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணிமினுக்கிச் சந்தன வாசனை சேறுடனமைத்துப் பஞ்சணை மீதணை மாதர்களுறவாமோ
இரைத்துப் பண்டம ராவதி வானவரொளித்துக் கந்தசு வாமிப ராபரமெனப்பட் டெண்கிரி ஏழ்கடல் தூள்படஅசுரார்கள்
இறக்கச் சிங்கம தேர்பரி யானையொடுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொடிரத்தச் சங்கம தாடிட வேல்விடுமயில்வீரா
சிரித்திட் டம்புர மேமத னாருடலெரித்துக் கண்டக பாலியர் பாலுறைதிகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல்கியசேயே
திருச்சித் தந்தனி லேகுற மானதையிருத்திக் கண்களி கூர்திக ழாடகதிருச்சிற் றம்பல மேவியு லாவியபெருமாளே.
