உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 460

தத்தையென் றொப்பிடுங் தோகைநட் டங்கொளுவர்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தத்தனந் தத்தனந் தானனத் தந்ததனதத்தனந் தத்தனந் தானனத் தந்ததனதத்தனந் தத்தனந் தானனத் தந்ததனதந்ததான

பாடல் வரிகள்

தத்தையென் றொப்பிடுங் தோகைநட் டங்கொளுவர்பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள்சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமையென்பநீலச்

சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொடொற்றிநன் சித்திரம் போலஎத் தும்பறியர்சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர்சங்கமாதர்

சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர்முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர்சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும்விஞ்சையோர்பால்

தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவைவிக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடுதுப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவியெந்தநாளோ

குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடுபொட்டெழுந் திட்டுநின் றாடஎட் டந்திகையர்கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரிகொண்டவேலா

கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரிபத்தரன் புற்றஎந் தாயெழிற் கொஞ்சுகிளிகொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழிமங்கைபாலா

சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணரசெட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரிசிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணருமெங்கள்கோவே

சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர்ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில்தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர்தம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →