பாடல் 445
வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தானதன தானதன தானதனதானதன தானதனதனதான
பாடல் வரிகள்
வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடுமேருகிரி யானகொடுதனபார
மீதுபுர ளாபரண சோதிவித மானநகைமேகமனு காடுகடலிருள்மேவி
நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவளநாணமழி வார்களுடனுறவாடி
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்ஞானசிவ மானபதமருள்வாயே
கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரியகோலமயி லானபதமருள்வோனே
கூடஅர னோடுநட மாடரிய காளியருள்கூருசிவ காமியுமையருள்பாலா
ஆறுமுக மானநதி பாலகுற மாதுதனமாரவிளை யாடிமணமருள்வோனே
ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரியஆதியரு ணாபுரியில்பெருமாளே.
