உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 436

போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத்தானனத் தத்ததனத்தத்த தனதான

பாடல் வரிகள்

போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்பாரியைப் பொற்குவையுச்சிப்பொ ழுதிலீயும்

போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத்தோரைமெச் சிப்பிரியப்பட்டு மிடிபோகத்

த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்தாரமுட் பட்டதிருட்டுக்க விகள்பாடித்

தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்சேல்வலைப் பட்டடிமைப்பட்டு விடலாமோ

ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்றாதரிக் கைக்கருணைத்துப்பு மதில்சூழும்

ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக்காகவெற் றிக்கலபக்கற்கி யமர்வோனே

தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்தூணிமுட் டச்சுவறத்திக்கி லெழுபாரச்

சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்சூரனைப் பட்டுருவத்தொட்ட பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →