பாடல் 437
மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தனத்தத் தனத்த தத்தனதான தனத்தத் தனத்த தத்தனதான தனத்தத் தனத்த தத்தனதனதான
பாடல் வரிகள்
மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்மீனை நிரப்பிக் குனித்து விட்டணைவாளி யைவட்டச் சமுத்தி ரத்தினைவடிவேலை
வாளை வனத்துற் பலத்தி னைச்செலமீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர்மாய வலைப்பட் டிலைத்து டக்குழல்மணநாறும்
ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழுவூறு முபத்தக் கருத்த டத்தினையூது பிணத்தைக் குணத்ர யத்தொடுதடுமாறும்
ஊசலை நித்தத் த்வமற்ற செத்தையுபாதியை யொப்பித் துனிப்ப வத்தறவோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமைதெளியாதோ
சானகி கற்புத் தனைச்சு டத்தனசோக வனத்திற் சிறைப்ப டுத்தியதானை யரக்கற் குலத்த ரத்தனைவருமாளச்
சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல்வாலி யுரத்திற் சரத்தை விட்டொருதாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன்மருகோனே
சோனை மிகுத்துத் திரட்பு னத்தினிலானை மதத்துக் கிடக்கு மற்புதசோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவமணிநீபத்
தோள்கொடு சக்ரப் பொருப்பி னைப்பொடியாகநெ ருக்கிச் செருக்க ளத்தெதிர்சூரனை வெட்டித் துணித்த டக்கியபெருமாளே.
