பாடல் 426
தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு
- தலம்
- திருவருணை
- ராகம்
- ஆனந்த பைரவி
- தாளம்
- அங்கதாளம் (9)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகதகிட-2 1/2தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனன தனந்தனந் தான தத்த தந்ததனன தனந்தனந் தான தத்த தந்ததனன தனந்தனந் தான தத்த தந்த..... தனதனத் தனதான
பாடல் வரிகள்
தமர குரங்களுங் காரி ருட்பி ழம்புமெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்துதழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு...... முளகதக் கடமாமேல்
தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்துஅடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்துதமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க.... மரணபக் குவமாநாள்
கமல முகங்களுங் கோம ளத்தி லங்குநகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்குகனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க..... தமுமடற் சுடர்வேலுங்
கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்தமயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கைகழலொலி தண்டையங் காலு மொக்க வந்து...... வரமெனக் கருள்கூர்வாய்
இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சிஅகில தலம்பெறும் பூவை சத்தி யம்பையிளமுலை யின்செழும் பால்கு டுத்தி லங்கு...... மியல்நிமிர்த் திடுவோனே
இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்கமுரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்றரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த...... அயிலுடைக் கதிர்வேலா
அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டுகழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்றஅபிநவ துங்ககங் காந திக்கு மைந்த..... அடியவர்க் கெளியோனே
அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கைதனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொலருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த..... அறுமுகப் பெருமாளே.
