பாடல் 425
செயசெய அருணாத் திரிசிவ யநமச்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தனனாத் தனதன தனனத்தனதன தனனாத் தனதன தனனத்தனதன தனனாத் தனதன தனனத்தனதான
பாடல் வரிகள்
செயசெய அருணாத் திரிசிவ யநமச்செயசெய அருணாத் திரிமசி வயநச்செயசெய அருணாத் திரிநம சிவயத்தி முலா
செயசெய அருணாத் திரியந மசிவச்செயசெய அருணாத் திரிவய நமசிச்செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த்தெனமாறி
செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்தரகர சரணாத் திரியென உருகிச்செயசெய குருபாக் கியமென மருவிச்சுடர்தாளைச்
சிவசிவ சரணாத் திரிசெய செயனச்சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்திருவடி சிவவாக் கியகட லமுதைக்குடியேனோ
செயசெய சரணாத் திரியென முநிவர்க்கணமிது வினைகாத் திடுமென மருவச்செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச்சுடும்வேலா
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்கடிதலை தெரியாப் படிநிண அருணச்சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற்புகல்வோனே
செயசெய சரணாத் திரியெனு மடியெற்கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற்குருநாதா
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்குறமகள் முலைமேற் புதுமண மருவிச்சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற்பெருமாளே.
