பாடல் 411
காணாத தூர நீணாத வாரி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிடதகிட-4, தகதகிடதகிட-4, தகதகிட-2 1/2தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2தானான தான தானான தானதானான தானதந்ததான
பாடல் வரிகள்
காணாத தூர நீணாத வாரிகாதார வாரமதன்பினாலே
காலாளும் வேளும் ஆலால நாதர்காலால் நிலாவுமுனிந்துபூமேல்
நாணான தோகை நூலாடை சோரநாடோ ர்க ளேசஅழிந்துதானே
நானாப வாத மேலாக ஆகநாடோ றும் வாடிமயங்கலாமோ
சோணாச லேச பூணார நீடுதோளாறு மாறும்விளங்குநாதா
தோலாத வீர வேலால டாதசூராளன் மாளவெகுண்டகோவே
சேணாடர் லோகம் வாழ்மாதி யானைதீராத காதல்சிறந்தமார்பா
தேவாதி கூடு மூவாதி மூவர்தேவாதி தேவர்கள்தம்பிரானே.
