பாடல் 408
கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தத்தத் தத்த தத்தத் தனதனதனன தத்தத் தத்த தத்தத் தனதனதனன தத்தத் தத்த தத்தத் தனதனதனதான
பாடல் வரிகள்
கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியைநிலகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனியகலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையறஇளநீரைக்
கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதபசயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவியகரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மதனபிஷேகம்
அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்துஅதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையினடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொடிருதாளம்
அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவியசிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடுமபிந வச்சித் ரத்த னத்துத் திருடிகளுறவாமோ
தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறைதொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகுதரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிடஎனவோதிச்
சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழவிழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள்தசைகள் பட்சித் துக்க ளித்துக் கழுதொடுகழுகாட
அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகளஅசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியெனஅடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடுமயிலோனே
அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியினுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபரஅருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள்பெருமாளே.
