பாடல் 407
கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்தனதனனத் தனதனனத்தனதான
பாடல் வரிகள்
கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்கயலெனபொற் சுழலும்விழிக்குழல்கார்போல்
கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற்கரகமலத் துகிர்விரலிற்கிளிசேருங்
குமரிதனத் திதமலைக் கிசலியிணைக் கலசமெனக்குவிமுலைசற் றசையமணிக்கலனாடக்
கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக்குனகிபொருட் பறிபவருக்குறவாமோ
திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட்டிமிடிமிடிட் டிகுர்திமிதித்தொலிதாளம்
செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட்டிகைசிலைபட் டுவரிபடச்சிலைகோடித்
துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்தொகுதசைதொட் டலகையுணத்தொடும்வேலா
துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற்சுகமொடணைத் தருணகிரிப்பெருமாளே.
