பாடல் 401
இருவினை யஞ்ச மலவகை மங்க
- தலம்
- திருவருணை
- ராகம்
- பூர்விகல்யாணி
- தாளம்
- மிஸ்ரசாபு (3 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகிட-1 1/2தனதன தந்த தனதன தந்ததனதன தந்ததனதான
பாடல் வரிகள்
இருவினை யஞ்ச மலவகை மங்கஇருள்பிணி மங்கமயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்புவினதக முங்கொடளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்களிமலர் சிந்தஅடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்துகடுகிந டங்கொடருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்கதிகழ்நகை கொண்டவிடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டுதிகழந டஞ்செய்தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தைஅமலன்ம கிழ்ந்தகுருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குர மங்கைஅமளிந லங்கொள்பெருமாளே.
