பாடல் 382
ஆலவிழி நீலத் தாலதர பானத்
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தானத் தானதன தானத்தானதன தானத்தந்ததான
பாடல் வரிகள்
ஆலவிழி நீலத் தாலதர பானத்தாலளக பாரக்கொண்டலாலே
ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்தாரநடை யால்நற்கொங்கையாலே
சாலமய லாகிக் காலதிரி சூலத்தாலிறுகு பாசத்துன்ப்முழ்கித்
தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்சாவதன்மு னேவற்கொண்டிடாயோ
சோலைதரு கானிற் கோலமற மானைத்தோளிலுற வாகக்கொண்டவாழ்வே
சோதிமுரு காநித் தாபழய ஞானச்சோணகிரி வீதிக்கந்தவேளே
பாலகக லாபக் கோமளம யூரப்பாகவுமை பாகத்தன்குமாரா
பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்பாடுமவர் தோழத்தம்பிரானே.
