பாடல் 381
வடவையன லுடு புக்கு முழுகியெழு மாம திக்கு
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தான தத்த தனதனன தான தத்ததனதனன தான தத்ததனதான
பாடல் வரிகள்
வடவையன லுடு புக்கு முழுகியெழு மாம திக்குமதுரமொழி யாழி சைக்குமிருநாலு
வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்குமடியருவ வேள்க ணைக்குமறவாடி
நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்குநிறையுமிகு காத லுற்றமயல்தீர
நினைவினொடு பீலி வெற்றி மரகத லாப சித்ரநிலவுமயி லேறி யுற்றுவரவேணும்
மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்துமவுலியற வாளி தொட்டஅரிராமன்
மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்கமவுனமறை யோது வித்தகுருநாதா
இடையரிவு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்குளினியகுண கோபு ரத்திலுறைவோனே
எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டுமிடையுருவ வேலை விட்டபெருமாளே.
