பாடல் 377
கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனத் தானனத் தனதனத் தானனத்தனதனத் தானனத்தனதான
பாடல் வரிகள்
கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்திலகுகட் சேல்களிப்புடனாடக்
கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்களவினிற் காசினுக்குறவாலுற்
றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்றுயர் பொருட் கோதியுட்படுமாதர்
ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்புணையிணைத் தாள்தனைத்தொழுவேனோ
மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்செறிதிருக் கோலமுற்றணைவானும்
மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்றிடஅடற் சூரனைப்பொரும்வேலா
அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்றருணையிற் கோபுரத்துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்றயருமச் சேவகப்பெருமாளே.
