பாடல் 378
பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனத் தானனத் தனதனத் தானனத்தனதனத் தானனத்தனதான
பாடல் வரிகள்
பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்பயனுயிர்ப் போயகப்படமோகப்
படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்படரெரிக் கூடுவிட்டலைநீரிற்
பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்பிணிகளுக் கேயிளைத்துழல்நாயேன்
பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்பிரியமுற் றோதிடப்பெறுவேனோ
கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்கமைவபற் றாசையக்கழலோர்முன்
கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்கடவுள்செச் சேவல்கைக்கொடியோனென்
றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்கருணையிற் கோபுரத்துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்றயருமச் சேவகப்பெருமாளே.
