பாடல் 376
கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனத் தானனத் தனதனத் தானனத்தனதனத் தானனத்தனதான
பாடல் வரிகள்
கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்கணவகெட் டேனெனப்பெறுமாது
கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்கதறிடப் பாடையிற்றலைமீதே
பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்பறைகள்கொட் டாவரச்சமனாரும்
பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்பரிகரித் தாவியைத்தரவேணும்
அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்றருணையிற் கோபுரத்துறைவோனே
அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்தரியசொற் பாவலர்க்கெளியோனே
புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்புனமறப் பாவையைப்புணர்வோனே
பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்பொருமுழுச் சேவகப்பெருமாளே.
