பாடல் 360
கருமுகில்திர ளாகக் கூடிய
- தலம்
- திருவானைக்கா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனதன தானத் தானனதனதனதன தானத் தானனதனதனதன தானத் தானனதனதான
பாடல் வரிகள்
கருமுகில்திர ளாகக் கூடியஇருளெனமரு ளேறித் தேறியகடிகமழள காயக் காரிகள்புவிமீதே
கனவியவிலை யோலைக் காதிகள்முழுமதிவத னேரப் பாவைகள்களவியமுழு மோசக் காரிகள்மயலாலே
பரநெறியுண ராவக் காமுகர்உயிர்பலிகொளு மோகக் காரிகள்பகழியைவிழி யாகத் தேடிகள்முகமாயப்
பகடிகள்பொரு ளாசைப் பாடிகளுருவியதன பாரக் கோடுகள்படவுளமழி வேனுக் கோரருள்புரிவாயே
மரகதவித நேர்முத் தார்நகைகுறமகளதி பாரப் பூண்முலைமருவியமண வாளக் கோலமுமுடையோனே
வளைதருபெரு ஞாலத் தாழ்கடல்முறையிடநடு வாகப் போயிருவரைதொளைபட வேல்விட் டேவியஅதிதீரா
அரவணைதனி லேறிச் சீருடன்விழிதுயில்திரு மால்சக் ராயுதன்அடியிணைமுடி தேடிக் காணவும்அரிதாய
அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும்உடையதொர்மயில் வாசிச் சேவகஅழகியதிரு வானைக் காவுறைபெருமாளே.
