பாடல் 353
அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு
- தலம்
- திருவானைக்கா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்தன தானன தத்ததத்தனதந்தன தானன தத்ததத்தனதந்தன தானன தத்ததத்தனதனதான
பாடல் வரிகள்
அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவுமிங்கித மாகந கைத்துருக்கவுமம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும்நகரேகை
அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவுமந்தர மாமுலை சற்றசைக்கவுமம்பரம் வீணில விழ்த்துடுக்கவுமிளைஞோர்கள்
நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்வம்புரை கூறிவ ளைத்திணக்கவுமன்றிடை யாடிம ருட்கொடுக்கவுமெவரேனும்
நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவுமிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பறநின்பத சேவைய நுக்ரகிப்பதுமொருநாளே
குஞ்சர மாமுக விக்கிநப்ரபுஅங்குச பாசக ரப்ரசித்தனொர்கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரமகணராஜன்
கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்எங்கள் விநாயக னக்கர்பெற்றருள்குன்றைய ரூபக கற்பகப்பிளையிளையோனே
துஞ்சலி லாதச டக்ஷரப்பிரபந்த சடானன துஷ்டநிக்ரகதும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரயபரிபாலா
துங்க கஜாரணி யத்திலுத்தமசம்பு தடாகம டுத்ததக்ஷிணசுந்தர மாறன்ம திட்புறத்துறைபெருமாளே.
