பாடல் 352
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
- தலம்
- காஞ்சீபுரம்
- ராகம்
- சாரங்கா
- தாளம்
- அங்கதாளம் (5 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்ததனதனாத் தந்த தந்ததனதான
பாடல் வரிகள்
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்அசடர்பேய்க் கத்தர் நன்றியறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்துஅவரைவாழ்த் தித்தி ரிந்துபொருள்தேடிச்
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்துதெரிவைமார்க் குச்சொ ரிந்துஅவமேயான்
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்துதெளியமோ க்ஷத்தை யென்றுஅருள்வாயே
இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்துஇடபமேற் கச்சி வந்தஉமையாள்தன்
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்தஇறைவர்கேட் கத்த குஞ்சொலுடையோனே
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்றுகுருவியோட் டித்தி ரிந்ததவமானைக்
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்தகுமரகோட் டத்த மர்ந்தபெருமாளே.
