பாடல் 30
அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- மோகனம்
- தாளம்
- அங்கதாளம் (5 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்ததனதன தனந்த தந்ததனதான
பாடல் வரிகள்
அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்பஅமரஅடி பின்தொ டர்ந்துபிணநாறும்
அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்புமவலவுட லஞ்சு மந்துதடுமாறி
மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்திமனவழி திரிந்து மங்கும்வசைதீர
மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சமலரடி வணங்க என்றுபெறுவேனோ
தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பைதிகழிரு தனம்பு ணர்ந்ததிருமார்பா
ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்புதிகிரிவலம் வந்த செம்பொன்மயில்வீரா
இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்தஇறைவகுக கந்த என்றுமிளையோனே
எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சுமிமையவரை யஞ்ச லென்றபெருமாளே.
