பாடல் 31
இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- ஹூஸேனி
- தாளம்
- அங்கதாளம் (9)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3தனதனன தனன தந்தத்தனதான
பாடல் வரிகள்
இயலிசையி லுசித வஞ்சிக்கயர்வாகிஇரவுபகல் மனது சிந்தித்துழலாதே
உயர்கருணை புரியு மின்பக்கடல்மூழ்கிஉனையெனது ளறியு மன்பைத்தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத்தினைகாவல்வனசகுற மகளை வந்தித்தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற்பதிவாழ்வேகரிமுகவ னிளைய கந்தப்பெருமாளே.
