உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 214

குமர குருபர முருக சரவண

ராகம்
பிலஹரி
தாளம்
மிஸ்ரசாபு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தகிட-1 1/2, தகதிமி-2தனன தனதன தனன தனதனதனன தனதனதனதான

பாடல் வரிகள்

குமர குருபர முருக சரவணகுகசண் முககரிபிறகான

குழக சிவசுத சிவய நமவெனகுரவ னருள்குருமணியேயென்

றமுத இமையவர் திமிர்த மிடுகடலதென அநுதினமுனையோதும்

அமலை அடியவர் கொடிய வினைகொடுமபய மிடுகுரலறியாயோ

திமிர எழுகட லுலக முறிபடதிசைகள் பொடிபடவருசூரர்

சிகர முடியுடல் புவியில் விழவுயிர்திறைகொ டமர்பொருமயில்வீரா

நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்நதிகொள் சடையினர்குருநாதா

நளின குருமலை மருவி யமர்தருநவிலு மறைபுகழ்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →