பாடல் 203
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
- தலம்
- சுவாமி மலை
- ராகம்
- நாட்டகுறிஞ்சி
- தாளம்
- அங்கதாளம் (8 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக, தகிட-1 1/2, தகதிமி-2தானான தனதனத் தான தனதனதானான தனதனத் தான தனதனதானான தனதனத் தான தனதனதந்ததான
பாடல் வரிகள்
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்மாமாய விருளுமற் றேகி பவமெனவாகாச பரமசிற் சோதி பரையையடைந்துளாமே
ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்யோகீச ரெவருமெட் டாத பரதுரியாதீத மகளமெப் போது முதயமநந்தமோகம்
வானாதி சகலவிஸ்த் தார விபவரம்லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்மாலீச ரெனுமவற் கேது விபுலமசங்கையால்நீள்
மாளாத தனிசமுற் றாய தரியநிராதார முலைவில்சற் சோதி நிருபமுமாறாத சுகவெளத் தாணு வுடனினிதென்றுசேர்வேன்
நானாவி தகருவிச் சேனை வகைவகைசூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடுநாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையிலங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனையடுசீராமன் மருகமைக் காவில் பரிமளநாவீசு வயலியக் கீசர் குமரகடம்பவேலா
கானாளு மெயனர்தற் சாதி வளர்குறமானொடு மகிழ்கருத் தாகி மருடருகாதாடு முனதுகட் பாண மெனதுடைநெஞ்சுபாய்தல்
காணாது மமதைவிட் டாவி யுயவருள்பாராயெ னுரைவெகுப் ப்ணதி யிளையவகாவேரி வடகரைச் சாமி மலையுறைதம்பிரானே.
