பாடல் 202
ஆனனமு கந்து தோளோடு தோளிணைக லந்து பாலன
- தலம்
- சுவாமி மலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தந்த தானன தானதன தந்த தானனதானதன தந்த தானனதனதான
பாடல் வரிகள்
ஆனனமு கந்து தோளோடு தோளிணைக லந்து பாலனஆரமுது கண்டு தேனெனஇத்ழுறல்
ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணெனஆனையுர மெங்கு மோதிடஅபிராம
மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்மாயுமனு வின்ப வாசையதறவேயுன்
வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதகவாசகம்வ ழங்கி யாள்வதுமொருநாளே
ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள்ஈடழிய வென்று வானவர்குலசேனை
ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகரராசதம றிந்த கோமளவடிவோனே
சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிருதோளுடைய கந்த னேவயலியில்வாழ்வே
சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தருஸ்வாமிமலை நின்று லாவியபெருமாளே.
