பாடல் 152
கோல குங்கும கற்புர மெட்டொன்
- தலம்
- பழநி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தந்தன தத்தன தத்தம்தான தந்தன தத்தன தத்தம்தான தந்தன தத்தன தத்தம்தனதான
பாடல் வரிகள்
கோல குங்கும கற்புர மெட்டொன்றான சந்தன வித்துரு மத்தின்கோவை செண்பக தட்பம கிழ்ச்செங்கழுநீரின்
கோதை சங்கிலி யுற்றக ழுத்தும்பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங்கூறு கொண்டப ணைத்தனம் விற்கும்பொதுமாதர்
பாலு டன்கனி சர்க்கரை சுத்தந்தேனெ னும்படி மெத்தரு சிக்கும்பாத கம்பகர் சொற்களி லிட்டம்பயிலாமே
பாத பங்கய முற்றிட வுட்கொண்டோ து கின்றதி ருப்புகழ் நித்தம்பாடு மன்பது செய்ப்பதி யிற்றந்தவனீயே
தால முன்புப டைத்தப்ர புச்சந்தேக மின்றிம திக்கவ திர்க்குஞ்சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந்தலைசாயச்
சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ்சூர னும்பொடி பட்டிட யுத்தஞ்சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந்தனிவேலா
ஆல முண்டக ழுத்தினி லக்குந்தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென்றாடு கின்றத கப்பனு கக்குங்குருநாதா
ஆட கம்புனை பொற்குடம் வைக்குங்கோபு ரங்களி னுச்சியு டுத்தங்காவி னன்குடி வெற்பினை னிற்கும்பெருமாளே.
