பாடல் 153
கோல மதிவதனம் வேர்வு தரஅளக
- தலம்
- பழநி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தனதனன தான தனதனனதான தனதனன தான தனதனனதான தனதனன தான தனதனனதனதான
பாடல் வரிகள்
கோல மதிவதனம் வேர்வு தரஅளகபாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிளமுகையான
கோக னகவுபய மேரு முலையசையநூலி னிடைதுவள வீறு பறவைவகைகூற யினியகள மோல மிடவளைகள்கரமீதே
காலி னணிகனக நூபு ரமுமொலிகளோல மிடஅதிக போக மதுமருவுகாலை வெகுசரச லீலை யளவுசெயுமடமானார்
காதல் புரியுமநு போக நதியினிடைவீழு கினுமடிமை மோச மறவுனதுகாமர் கழலிணைக ளான தொருசிறிதுமறவேனே
ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிகலாக வருமவுணர் சேர வுததியிடைநாச முறஅமர்செய் வீர தரகுமரமுருகோனே
நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புனமீதி லியலகல்கல் நீழ லிடைநிலவிநாணம் வரவிரக மோது மொருசதுரபுரிவேலா
மேலை யமரர்தொழு மானை முகரரனையோடி வலம்வருமுன் மோது திரைமகரவேலை யுலகைவல மாக வருதுரகமயில்வீரா
வீறு கலிசைவரு சேவ கனதிதயமேவு முதல்வவயல் வாவி புடைமருவுவீரை வருபழநி ஞான மலையில்வளர்பெருமாளே.
