பாடல் 1323
கருவெனு மாயை உ ருவினில் மூழ்கி
- தலம்
- புதிய பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தான தனதன தானதனதன தானதனதான
பாடல் வரிகள்
கருவெனு மாயை உ ருவினில் மூழ்கிவயதள வாகநிலமீதில்
கலைதெரிவாணர் கலைபல நூல்கள்வெகுவித மாககவிபாடித்
தெருவழி போகி பொருளெனு மாசைதிரவியம் நாடிநெடிதோடிச்
சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கிசிறுவித மாகதிரிவேனோ
அருளநு போக குருபர னேஉ ன்அடியவர் வாழஅருள்வோனே
அரனிரு காதில் அருள்பர ஞாநஅடைவினை ஓதிஅருள்பாலா
வெருவிடு சூரர் குலஅடி வேரைவிழவிடு சாசுவதிபாலா
மிடலுட லாளர் அடரசுர் மாளவிடுமயில் வேலபெருமாளே.
