உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1313

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - அங்கதாளம் (9)தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1தான தானதன தத்ததன தத்ததனதான தானதன தத்ததன தத்ததனதான தானதன தத்ததன தத்ததனதந்ததான

பாடல் வரிகள்

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளிவீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளிஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையுமிந்துவாகை

ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளியாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇதழாகி யேழுமள விட்டருண விற்பதியின்விந்துநாத

ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிகமோடு கூடியொரு மித்தமுத சித்தியொடுமோது வேதசர சத்தியடி யுற்றதிருநந்தியூடே

ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெறமூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகையின்றுதாராய்

வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருணசெங்கையாளி

வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலைவாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்மாசு சேரழுபி றப்பையும றுத்தவுமைதந்தவாழ்வே

காசி ராமெசுரம் ரத்நகிரிசர்ப்பகிரிஎருர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல்செந்தில்நாகை

காழி ஧வ்ளுர்பழ நிக்கிரிகுறுக்கைதிருநாவ லு஡ர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ்காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ்தம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →