பாடல் 1312
வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து
- தலம்
- பழமுதிர்சோலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தந்த தந்த தானதன தந்த தந்ததானதன தந்த தந்ததனதான
பாடல் வரிகள்
வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்துமால்வரை யசைந்த நங்கன்முடிசாய
வாளகிரியண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்தமாதவ மறந்து றந்துநிலைபேரப்
பூரண குடங்க டிந்து சிதகள பம்பு னைந்துபூசலை விரும்பு கொங்கைமடவார்தம்
போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்துபூசனைசெய் தொண்ட னென்பதொருநாளே
ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள்ஆகுதி யிடங்கள் பொங்குநிறைவீதி
ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கையாரமர வந்த லம்புதுறைசேரத்
தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்றசூழ்மணிபொன் மண்ட பங்கள்ரவிபோலச்
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்றசோலைமலை வந்து கந்தபெருமாளே.
