பாடல் 1311
வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்
- தலம்
- பழமுதிர்சோலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தான தந்த தானதன தான தந்ததானதன தான தந்ததனதான
பாடல் வரிகள்
வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்வேல்விழியி னான்ம யங்கிபுவிமீதே
வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல்வேலைசெய்து மால்மி குந்துவிரகாகிப்
பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்புபாதகனு மாகி நின்றுபதையாமல்
பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டைபாதமலர் நாடி யென்றுபணிவேனோ
புரணம தான திங்கள் சூடுமர னாரிடங்கொள்பூவையரு ளால்வ ளர்ந்தமுருகோனே
பூவுல கெலாம டங்க வோரடியி னால ளந்தபூவைவடி வானு கந்தமருகோனே
சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்துதூள்கள்பட நீறு கண்டவடிவேலா
சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்துசோலைமலை மேல மர்ந்தபெருமாளே.
