பாடல் 1309
காரணம தாக வந்து ...... புவிமீதே
- தலம்
- பழமுதிர்சோலை
- ராகம்
- ஹம்ஸத்வனி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (8 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3தானதன தான தந்ததனதான
பாடல் வரிகள்
காரணம தாக வந்துபுவிமீதே
காலனணு காதி சைந்துகதிகாண
நாரணனும் வேதன் முன்புதெரியாத
ஞானநட மேபு ரிந்துவருவாயே
ஆரமுத மான தந்திமணவாளா
ஆறுமுக மாறி ரண்டுவிழியோனே
சூரர்கிளை மாள வென்றகதிர்வேலா
சோலைமலை மேவி நின்றபெருமாளே.
