உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1279

வீணையிசை கோட்டி யாலமிட று஡ட்டு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானதன தாத்த தானதன தாத்ததானதன தாத்ததனதான

பாடல் வரிகள்

வீணையிசை கோட்டி யாலமிட று஡ட்டுவீரமுனை யீட்டிவிழியார்தம்

வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில்வீழுமயல் தீட்டியுழலாதே

ஆணியுள வீட்டை மேவியுள மாட்டையாவலுட னீட்டியழியாதே

ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டியானநிலை காட்டியருள்வாயே

கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்கேள்சுறுதி நாட்டிலுறைவோனே

கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டுகீரரியல் கேட்டக்ருபைவேளே

சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டிசீதவிரு கோட்டிலணைவோனே

சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டிதேவர்சிறை மீட்டபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →