பாடல் 1280
வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானனா தத்ததன தானனா தத்ததனதானனா தத்ததனதனதான
பாடல் வரிகள்
வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன்வீசுபா ணத்தைநிகரெனலாகும்
வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளையாடிமோ கித்திரியும்வெருப
கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவிகாரமோ டத்தெளியஅரிதான
கூறொணா தற்பரம ஞான்ரு பத்தின்வழிகூடலா கப்பெருமைதருவாயே
வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழவாளிபோ டக்கருதுமநுராமன்
வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளையூதிமோ கித்துவிழஅருள்கூரும்
நீலமே னிக்குமரு காவுதா ரத்துவருநீசர்வாழ் வைக்களையுமிளையோனே
நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணருநீபதோ ளொப்பரியபெருமாளே.
