பாடல் 1251
துடித்தெதிர் வடித்தெழு குதர்க்கச மயத்தவர்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தன தனத்தன தனத்தன தனத்தனதனத்தன தனத்தனதனதான
பாடல் வரிகள்
துடித்தெதிர் வடித்தெழு குதர்க்கச மயத்தவர்சுழற்கொரு கொடிக்கொடியெதிர்கூறித்
துகைப்பன கிதத்தலை யறுப்பன யில்விட்டுடல்துணிப்பன கணித்தலைமிசைபார
முடித்தலை விழுப்பன முழுக்கஅ டிமைப்படமுறைப்படு மறைத்திரளறியாத
முதற்பொருள் புலப்பட வுணர்த்துவ னெனக்கொருமொழிப்பொருள் பழிப்பறஅருள்வாயே
குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பனகொழுத்தகு ருதிக்கடலிடையூடே
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பனகுவட்டினை யிடிப்பனசிலபாடல்
படிப்பன திருப்புக ழெடுப்பன முடிப்பனபயிற்றிய லகைக்குலம்விளையாடப்
பகைத்தெழு மரக்கரை யிமைப்பொழு தினிற்பொடிபடப்பொரு துழக்கியபெருமாளே.
