பாடல் 1250
தீயுதை தாத்ரிபானீய மேற்ற
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானான தாத்த தானான தாத்ததானான தாத்ததனதான
பாடல் வரிகள்
தீயுதை தாத்ரிபானீய மேற்றவானீதி யாற்றிகழுமாசைச்
சேறுறு தோற்பை யானாக நோக்குமாமாயை தீர்க்கஅறியாதே
பேய்பூத மூத்த பாறோரிகாக்கைபீறாஇ ழாத்தினுடல்பேணிப்
பேயோன டாத்து கோமாளி வாழ்க்கைபோமாறு பேர்த்துனடிதாராய்
வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டிலேய்வாளை வேட்கவுருமாறி
மீளாது வேட்கை மீதூர வாய்த்தவேலோடு வேய்த்த ....... ; ளையோனே
மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்மாமேரு வேர்ப்பறியமோதி
மாறான மாக்கள் நீறாக வோட்டிவானாடு காத்தபெருமாளே.
