பாடல் 1245
தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர்
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- சுத்த சாவேரி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதிதத்த தனதனன தத்த தனதனனதத்த தனதனனதனதான
பாடல் வரிகள்
தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர்தக்க மனையினமுமனைவாழ்வுந்
தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகுதைக்கு மயல்நினைவுகுறுகாமுன்
பத்தி யுடனுருகி நித்த முனதடிகள்பற்று மருள்நினைவுதருவாயே
பத்து முடியுருளு வித்த பகழியினர்பச்சை நிறமுகிலின்மருகோனே
அத்தி முகவனழ குற்ற பெழைவயிறனப்ப மவரைபொரிஅவல்தேனும்
அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅடவிக்குள் மறமகளையணைவோனே
முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடுமுற்று மறைமொழியைமொழிவோனே
முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல்வெட்டி யமர்பொருதபெருமாளே.
