பாடல் 1222
எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ஹம்ஸாநந்தி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (18 1/2)தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2தகிட-1 1/2, தகதிமி-2தனதனன தனதனன தனதனன தனதனனதத்தத்த தத்தானதந்ததான
பாடல் வரிகள்
எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிருதிட்டுக்ரியைக்கேயெழுந்துபாரின்
இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலையெட்டெட்டு மெட்டாதமந்த்ரவாளால்
விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரைவெட்டித் துணித்தாண்மைகொண்டுநீபம்
விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிறவெட்சித் திருத்தாள்வணங்குவேனோ
திதிபுல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர்செக்கச் செவத்தேறுசெங்கைவேலா
சிகரகிரிதகரவிடு முருவமர கதகலபசித்ரக் ககத்தேறுமெம்பிரானே
முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககனமுட்டச் செலுத்தாறிரண்டுதேரர்
மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனுமுப்பத்து முத்தேவர்தம்பிரானே.
