பாடல் 1223
எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத்தனந்தனந் தத்தத்தனதானம்
பாடல் வரிகள்
எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத்திரண்டுகண் பட்டிட்டிளையோர்நெஞ்
சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட்டிணங்குபொன் செப்புத்தனமாதர்
அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற்றணைந்துபின் பற்றற்றகல்மாயத்
தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட்டலைந்தலைந் தெய்த்திட்டுழல்வேனோ
பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத்துடன்பெருங் கைக்குட்படவாரிப்
பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க்கிதஞ்செய்தொன் றத்திக்கிளையோனே
தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச்சலம்பிளந் தெற்றிப்பொருசூரத்
தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத்தடிந்திடுஞ் சொக்கப்பெருமாளே.
