உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1213

ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானத் தனத்ததன தானத் தனத்ததனதானத் தனத்ததனதனதான

பாடல் வரிகள்

ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவருமாடைப் பணத்தையெடெனுறவாடி

ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழியாடக் குலத்துமயில்கிளிபோலப்

பேசித் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடிபேதைப் படுத்திமயலிடுமாதர்

பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனைபீடைப் படுத்துமயலொழியாதோ

தேசத் தடைத்துபிர காசித் தொலித்துவரிசேடற் பிடுத்துதறுமயில்வீரா

தேடித் துதித்தஅடி யார்சித்த முற்றருளுசீர்பொற் பதத்தஅரிமருகோனே

நேசப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழுநீசற் கனத்தமுறவிடும்வேலா

நேசக் குறத்திமய லோடுற் பவித்தபொனிநீர்பொற் புவிக்குள்மகிழ்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →