பாடல் 1172
பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தத்தன தத்தத் தனதனதத்தத்தன தத்தத் தனதனதத்தத்தன தத்தத் தனதனதனதான
பாடல் வரிகள்
பத்தித்தர ளக்கொத் தொளிர்வரிபட்டப்புள கச்செப் பிளமுலைபட்டிட்டெதிர் கட்டுப் பரதவருயர்தாளப்
பத்மத்திய ரற்புக் கடுகடுகட்சத்தியர் மெத்தத் திரவியபட்சத்திய ரிக்குச் சிலையுருவிலிசேருஞ்
சித்தத்தரு ணர்க்குக் கனியதரப்புத்தமு தத்தைத் தருமவர்சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறைநுதலார்தந்
தெட்டிற்படு கட்டக் கனவியபட்சத்தரு ளற்றுற் றுனதடிசிக்கிட்டிடை புக்கிட் டலைவதுதவிராதோ
மத்தப்பிர மத்தக் கயமுகனைக்குத்திமி தித்துக் கழுதுகள்மட்டிட்டஇ ரத்தக் குருதியில்விளையாட
மற்றைப் பதினெட்டுக் கணவகைசத்திக்கந டிக்கப் பலபலவர்க்கத்தலை தத்தப் பொருபடையுடையோனே
முத்திப்பர மத்தைக் கருதியசித்தத்தினில் முற்றத் தவமுனிமுற்பட்டுழை பெற்றுத் தருகுறமகள்மேல்மால்
முற்றித்திரிவெற்றிக் குருபரமுற்பட்டமு ரட்டுப் புலவனைமுட்டைப்பெயர் செப்பிக் கவிபெறுபெறுமாளே.
