பாடல் 1161
சொக்குப்பொட் டெத்திக் கைப்பொரு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தத்தத் தத்தத் தத்தனதத்தத்தத் தத்தத் தத்தனதத்தத்தத் தத்தத் தத்தனதனதான
பாடல் வரிகள்
சொக்குப்பொட் டெத்திக் கைப்பொருளைக்கெத்திற் பற்றிச் சிக்கொடுசுற்றுப்பட் டெற்றித் தெட்டிகள்முலைமீதே
சுற்றுப்பொற் பட்டுக் கச்சினர்முற்றிக்குத் தத்தைக் கொப்பெனசொற்பித்துக் கற்பிற் செப்பியதுயராலே
சிக்குப்பட் டுட்கிப் பற்கொடுவெற்றிக்கைக் குத்துப் பட்டிதழ்தித்திப்பிற் கொத்துப் பித்துயர்கொடுநாயேன்
திக்குக்கெட் டொட்டுச் சிட்டெனபட்டத்துற புத்திக் கட்டறசெப்பத்துற் பற்றற் கற்புதமருள்வாயே
தக்குத்தக் குக்குக் குக்குடதட்டுட்டுட் டுட்டுட் டுட்டெனதக்குத்திக் கெட்டுப் பொட்டெழவிருதோதை
தத்தித்தித் தித்தித் தித்தெனதெற்றுத்துட் டக்கட் டர்ப்படைசத்திக்கொற் றத்திற் குத்தியமுருகோனே
துக்கித்திட் டத்தித் துக்ககநெக்குப்பட டெக்கித் துட்டறுசுத்தப்பொற் பத்தர்க் குப்பொருளருள்வேலா
துற்றப்பொற் பச்சைக் கட்கலபச்சித்ரப் பக்ஷிக் கொற்றவசொக்கர்க்கர்த் தத்தைச் சுட்டியபெருமாளே.
