பாடல் 1160
சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்தானதனத் தானதனத்தனதான
பாடல் வரிகள்
சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித்தூறுசிவப் பேறுவிழிக்கணையாலே
தேனிரதத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத்தேறலெனக் கூறுமொழிச்செயலாலே
ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத்தாலுமிதத் தாலும்வளைப்பிடுவோர்மேல்
ஆசையினைத் தூரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற்றாளிணையைச் சேரஎனக்கருள்வாயே
காலனைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட் டேமதனைக்காயஎரித் தேவிதியிற்றலையூடே
காசியினிற் காணஇரப் போர்மதியைச் சூடியெருத்தேறிவகித் தூருதிரைக்கடல்மீதில்
ஆலமிடற் றானையுரித் தோலையுடுத் தீமமதுற்றாடியிடத் தேயுமைபெற்றருள்வாழ்வே
ஆழியினைச் சூரனைவெற் பேழினையுற் றேயயில்விட்டாதுலருக் காறுமுகப்பெருமாளே.
