பாடல் 1094
குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தனதனன தனதனன தனதனனதனதனன தனதனனதனதான
பாடல் வரிகள்
குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகுகுமுதமிடு பரசமயமொருகோடி
குருடர்தெரிவரியதொரு பொருள்தெரிய நிகழ்மனதுகொடியஇரு வினையெனுமளறுபோக
உ தறிவித றியகரண மரணமற விரணமறவுருகியுரை பருகியநுதினஞான
உ ணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபதயுகளமினி யுணரஅருள்புரிவாயே
சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவைசிறுபொறிக ளெனவுரகபிலமேழுஞ்
செகதலமு நிகர்சிகரிபலவுநல கெசபுயகதிசையுமுட னுருகவருகடைநாளிற்
கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகையெனமுடிவில் ககனமுகடதிலோடுங்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரககடகமுட னமர்பொருதபெருமாளே.
