பாடல் 1093
குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனதன தனனதன தனனதன தனனதனதனனதன தனனதனதனதான
பாடல் வரிகள்
குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவுகொழுவுமுதி ரமும்வெளிறளறுமாகக்
கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதிகுமுகுமென இடைவழியில்வரநாறும்
உ டலில்மண மலிபுழுகு தடவியணி கலமிலகவுலகமரு ளுறவருமரிவையாரன்
பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎனதொழிவிலக லறிவையருள்புரிவாயே
வடகனக சயிலமுத லியசயில மெனநெடியவடிவுகொளு நெடியவிறல்மருவாரை
வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமெனமகரசல நிதிமுழுகிவிளையாடிக்
கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகிலககனமுக டுறநிமிருமுழுநீலக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரககடகமுட னமர்பொருதபெருமாளே.
