பாடல் 1092
அனகனென அதிகனென அமலனென அசலனென
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனதன தனனதன தனனதன தனனதனதனனதன தனனதனதனதான
பாடல் வரிகள்
அனகனென அதிகனென அமலனென அசலனெனஅபயனென அதுலனெனஅநபாயன்
அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடியவர்பெயரு மிடைசெருகியிசைபாடி
வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கைமகிபஎன தினையளவுளவுமீயா
மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழியமனமொழிய வொருபொருளைஅருள்வாயே
இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளெனஇருசதுர திசையிலுரகமும்வீழ
இரணியச யிலம்ரசித சயிலமர கதசயிலமெனவிமலை யமுனை யெனநிழல்வீசிக்
ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழிகதுவியெழில் பொதியமிசைபடர்கோலக்
கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரககடகமுட னமர்பொருதபெருமாளே.
