பாடல் 1081
மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தத்த தந்த தனதன தத்த தந்ததனதன தத்த தந்ததனதான
பாடல் வரிகள்
மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்துமறுமைத னிற்சு ழன்றுவடிவான
சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்துதளர்வுறு தற்கு முந்தியெனையாள்வாய்
படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்றபசுமுகி லுக்கு கந்தமருகோனே
குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்தகுமரகு றத்தி நம்புபெருமாளே.
