பாடல் 1082
கருமய லேறிப் பெருகிய காமக்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தானத் தனதன தானத்தனதன தானத்தனதான
பாடல் வரிகள்
கருமய லேறிப் பெருகிய காமக்கடலினில் மூழ்கித்துயராலே
கயல்விழி யாரைப் பொருளென நாடிக்கழியும நாளிற்கடைநாளே
எருமையி லேறித் தருமனும் வாவுற்றிறுகிய பாசக்கயிறாலே
எனைவளை யாமற் றுணைநினை வேனுக்கியலிசை பாடத்தரவேணும்
திருமயில் சேர்பொற் புயனென வாழத்தெரியல னோடப்பொரும்வீரா
செகதல மீதிற் பகர்தமிழ் பாடற்செழுமறை சேர்பொற்புயநாதா
பொருமயி லேறிக் கிரிபொடி யாகப்புவியது சூழத்திரிவோனே
புனமக ளாரைக் கனதன மார்பிற்புணரும்வி நோதப்பெருமாளே.
