பாடல் 1070
புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்த தந்தனம் தனத்த தந்தனம்தனத்த தந்தனம்தனதான
பாடல் வரிகள்
புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்புனத்தி லன்றுசென்றுறவாடிப்
புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண்புதுக்கு ரும்பைமென்புயமீதே
செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்திளைக்கு நின்திறம்புகலாதிந்
த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந்தியக்க மென்றொழிந்திடுவேனோ
குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங்குவட்டி லங்கையுந்துகளாகக்
கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங்கொதித்து மண்டுவெம்பகையோடத்
துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந்துரத்த னும்பிறந்திறவாத
சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்துதிக்கு மும்பர்தம்பெருமாளே.
